ஞாயிறு, 2 டிசம்பர், 2012

தலித் அமைப்புகளின் பிரச்சார பொய்கள் - 1

தலித் என்னும் ஒரு செயற்கையான ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டு, தலித் அமைப்புகள் செய்யும் பிரச்சாரப் பொய்கள் பல வருடங்களாகவே தொடர்ந்து கொண்டிருக்கின்றன.  

இதுநாள் வரை, இந்த பிரச்சாரத்தை பயன்படுத்தி இட ஒதுக்கீடு மட்டுமே பெறும் நிலை இருந்தது.   ஆனால் கடந்த சில வருடங்களாக, இந்த அமைப்பினர், நில உடைமை ஜாதிகளின் பெண்களை திட்டமிட்டு கல்யாணம்  செய்து, அவர்களின் சொத்துக்களை அபகரிக்க ஆரம்பத்திருக்கிறார்கள்.  இந்த பகல் கொள்ளையை தைரியமாக நியாயப்படுத்தியும் வருகிறார்கள். 

இவர்களின் திட்டமிட்ட பிரச்சார பொய்களை எதிர் கொள்ள முடியாமல், பாதிக்கப்பட்ட "ஆதிக்க சாதி" என்று சொல்லப்படும் சாதிகள், , பொதுத் தளத்தில் தங்களது நியாயமான வாதங்களை கூட எடுத்து வைக்க முடிவதில்லை.  

சமீபத்தில் கேப்டன் டி.வி யில "சொல் புதிது" என்ற நிகழ்ச்சியில், தர்மபுரிய பத்தின ஒரு விவாதத்தில் சமத்துவ நீதிக் கட்சி தலைவி சிவகாமி IAS, இந்த மாதிரி கட்டமைக்கப்பட்ட பொய் பிரச்சாரத்தை லாவகமாக பயன்படுத்தியிருக்கிறார்.    அதைப்பற்றி ஒவ்வொன்றாக இங்கே பார்ப்போம்.






அதற்கு முன் ஒரு சில அடிப்படை விஷயங்களை புரிந்து கொள்வோம்.


தலித் என்பது ஒரு மாயை:

இவர்கள் உபயோகப்படுத்தும் தலித் அடையாளத்தை நாம் ஏற்றுக் கொள்ளக்கூடாது.  எந்த சாதியும் தன்னை தலித் என்று சொல்வதில்லை.  ஆக தனிப்பட்ட சாதி பெயரையே இங்கு பயன்படுத்துவோம்.

சமத்துவம் என்பதும் ஒரு மாயை:

இவர்கள் உபயோகப்படுத்தும் சமத்துவ வாதமும், வெத்து வாதம்.  உலகத்தில் இன்று வரை எந்த ஒரு பகுதியிலும் சமத்துவம் என்பதே கிடையாது.  அது சாத்தியமில்லாதது.   இயற்கைக்கு முரணானது. சொல்லப்போனால்  இந்த சமத்துவத்துக்காக 10 கோடி பேர்த்துக்கும் மேல் இதுவரை கொன்று குவித்திருக்கிறார்கள்.   இந்த மாதிரி ஒரு கொடூரமான சித்தாந்தத்தை பேசுபவர்கள், அடக்குமுறையாளர்களாகவே இருப்பார்கள்.  இவர்களால சமுதாயத்தின் பன்முகத்தன்மையை ஏற்றுக் கொள்ள முடியாது.   எல்லாரும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்ற குறுகிய எண்ணம் உள்ளவர்கள்.  

அதனால் இந்த சமத்துவ் வாதத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாது.  எல்லாரும் சமம் கிடையாது என்பதை தைரியமாக சொல்ல வேண்டும்.

தாழ்த்தப்பட்ட சாதி:

தாழ்த்தப்பட்ட சாதி என்பதே ஒரு மிகப்பெரிய பொய்.. பொய் மட்டுமல்ல.. ஒரு மோசடியும் கூட..  நம் நாட்டில் ஒரு சாதி, தன் வாழ்க்கை முறையாலும் உழைப்பாலும் இன்னொன்றை விட உயர்ந்துள்ளதே தவிர, மற்ற சாதியை தாழ்த்தவில்லை..  மேற்கத்திய ஐரோப்பா நாடுகளில்தான், அடிமைகளை விலைக்கு வாங்கி, வேலை வாங்கியிருக்கிறார்கள்..    நம்மிடையே அந்த மாதிரி அடிமைமுறை இல்லவே இல்லை..  ஆனால், இந்த தலித் இயக்கங்கள், கூலி வேலை செய்தாலே அடிமை என்று முத்திரை குத்திவிடுகிறார்கள்.   

ஒரு விவசாயியின் தோட்டத்தில் வேலை செய்வது அடிமை வேலை.. ஆனால், ஒரு தொழிற்சாலையில் அட்மாட்டு கூலிக்கு வேலை செய்வது சுதந்திரமாம்?

ஆக இந்த தாழ்த்தப்பட்ட என்ற வார்த்தையையே ஏற்கக்கூடாது..

தனி மனித உரிமை:

தனி மனிதன் என்ற சித்தாந்தமே நம் சமூகத்தில் கிடையாது..  யாரும் தனியாக வாழமுடியாது..  யாரையாவது நம்பியே வாழவேண்டும்.. நம் சமுதாயத்தில், குடும்பத்தை சார்ந்து, சாதியை சார்ந்தே வாழ்கிறார்கள்..   குடும்பமும் சாதியும்தான் எலலாரையும் காப்பாற்றி வந்திருக்கிறது..  ஒரு குழந்தையை வளர்க்க, ஒவ்வொரு பெற்றோரும், தன்னுடைய சொந்த உழைப்பிலும் சம்பாத்தியத்திலும் வளர்த்து ஆளாக்குகிறார்கள்.  அவர்களுக்கு சாதி மக்கள் கஷ்ட நஷ்டங்களில் பக்கபலமாக இருக்கிறார்கள்.   அப்படியிருக்கும்பொழுது, தனி மனித உரிமை எங்கிருந்து வந்தது?   பெற்றோருக்கு சமுதாயத்திற்கு கடன்பட்டவர்களாகத்தானே இருக்கிறார்கள்.?

ஆனால் இந்த அரசாங்கம் என்ன சொல்கிறது என்றால், பெத்தவங்க எப்படி கஷ்டப்பட்டு வளர்த்திருந்தாலும், அதையெல்லாம் கண்டுக்காத.. 18 வயது வந்தவுடனேயே நீ உன் இஷ்டம் போல திரியலாம்.. என்று சொல்கிறது.  இதைத்தான் தனி மனித சுதந்திரம் என்று ஏமாற்றுகிறார்கள்..  இது தனி மனித உர்மையல்ல.. கேப்மாரித்தனம்.. எந்த விதத்திலும் நியாயம் இல்லை..  அதனால்,  இந்த தனி மனித உரிமையையும் ஏற்றுக் கொள்ளக்கூடாது..



மேற்கண்ட நான்கு அடிப்படை சித்தாந்தங்களையும் உடைத்தெறிந்து விட்டால், இந்த திராவிட கழகங்களுக்கும், தலித் அமிப்புகளும் செய்யும் பிரச்சாரங்கள் பிசு பிசுத்து போய்விடும். ஆனால், அப்படி செய்ய இங்கு யாருக்கும் தைரியமில்லை.  அது தான் இந்த தலித் அமைப்புகளுக்கு மிகப்பெரிய பலம். 

சரி.. இப்ப சிவகாமி IAS அவர்களோட வாதத்திற்கு வருவோம்..

பகுதி - 1:





80% தலித்களுக்கு நிலம் கிடையாது:  ( 02:44 ஆவது நிமிடம்)

இது ஒரு ஏமாற்றும் வாதம்.  கேட்பவர்களுக்கு என்னமோ தலித் என்று சொல்லப்படும் ஜாதிகளுக்கு, வசிக்க கூட நிலமில்லை என்று நினைக்க வைக்கும்.  அப்படியில்லை.  எல்லா சாதிகளுக்கும் வீடு கட்டி வாழ நிலம் இருக்கிறது.  ஆனால் இவர் குறிப்பிடுவது விவசாயம் செய்ய நிலம்.   

தமிழ்நாட்டில், பள்ளர் சாதியில் இருக்கும் பெரும்பாலானவர்களுக்கு நெல் விளையும் பூமி இருக்கிறது.  அப்படியிருக்கும்பொழுது, 80 சதவிகித தலித்களுக்கு நிலமில்லை என்று சொல்வது வடிகட்டிய பொய்?

அடுத்து,  என்னமோ தலித்களுக்கு மட்டுமே விவசாய நிலம் இல்லை என்பது போல பேசுகிறார்.   வெள்ளாளர்களை தவிர, மற்ற எல்லா சாதிகளுக்கும் விவசாய நிலம் இல்லை என்பதே உண்மை.  வண்ணார், நாவிதர், செட்டியார், பிராமணர், நெசவாளர் என்று யாரை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்..  அவர்களுக்கும் நிலம் இல்லை.   விவசாய நிலம் இல்லாதவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்றால், இந்த சாதிகளும் தாழ்த்தப்பட்டவர்கள்தானே?  

நம்முடைய சாதி அமைப்பில், ஒவ்வொரு சாதிக்கும் ஒரு தொழில் இருந்திருக்கிறது..  குடும்ப தொழில் மாதிரி, சாதி தொழில் என்பது வழி வழியாக அவர்களுக்கு வாழ்வாதாரமாக இருந்திருக்கிறது..   
அருந்ததியருக்கு, தோல் தொழில் வாழ்வாதாரம்..  பறையருக்கு பறையடிப்பதும், காவல் வேலை செய்வதும் வாழ்வாதாரம்..  ஆசாரிக்கு, மரவேலையும், சாணாரருக்கு பனை வேலையும், ஒட்டர்களுக்கு கல் உடைப்பதுமாக, எல்லாருக்கும் ஒரு தொழில் இருந்திருக்கிறது.
இந்த வாழ்வாதாரங்களே இந்த சாதிகள் சுதந்திரமாக இருப்பதற்கு அடித்தளமாக இருந்திருக்கிறது.

வெள்ளாளர்களின் தொழில் விவசாயம் என்பதால் அவர்களுக்கு அதிகப்படியான நிலங்கள் இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. விவசாயம் அவர்களுக்கு வாழ்வாதாரம்.  

நம்முடையது என்றைக்குமே நில உடைமை சமூகமாக இருந்ததில்லை..  

உண்மையில் இவர்கள் ஆதிக்க சாதிகள் என்று குற்றம் சாட்டும் சாதிகள், முன்பு ஆட்சியாளராக இருந்து, எல்லா சாதிகளையும் காப்பாற்றியே வந்திருக்கின்றனர்.   நிராதரவாக இருந்தவர்களுக்கு, அடைக்கலம் கொடுத்து உதவியும் இருக்கின்றனர்.  

உதாரணத்திற்கு, விஜயநகர் சாம்ராஜ்ஜியத்தை பாமானிய முஸ்லிம் மன்னர்கள் அடித்து நொறுக்கிய பொழுது, தெலுங்கு நாயக்கர்கள், தெலுங்கு சக்கிலியரை காப்பாற்றி தமிழ்நாட்டுக்கு கூட்டி வந்திருக்கின்றனர்.   இங்கிருந்த, பூர்வகுடிகளான, முதலியார்கள், கவுண்டர்கள், பிள்ளைமார்கள், அகதிகளாக வந்த தெலுங்கு சக்கிலியருக்கு ஊரோரம் தங்க அனுமதி தந்து உதவியிருக்கிறார்கள்.  இப்படி வந்தவர்கள்தான் இன்று தமிழ்நாடு முழுதும் இருக்கும் தெலுங்கு சக்கிலியர்கள்.

ஆனால் இன்று ஆதித் தமிழர் பேரவை என்று கூசாமல் பெயர் வைத்துக் கொண்டு, தனி இட ஒதுக்கீடும் வாங்கியது அநியாயத்திலும் அநியாயம்.

இதில் ஒன்றை கவனிக்க வேண்டும்.  பூர்வகுடிகளாக தமிழ் மாதாரிகளுக்கும் இவர்களுக்கு எந்த வித சம்பந்தமும் இல்லை.  தமிழ் மாதாரிகள், இந்த மண்ணின் மைந்தர்கள்.  வெள்ளாளர்களான பிள்ளைமார்கள், முதலியார்கள், கவுண்டர்கள், இந்த மண்ணில் ஊரை உருவாக்கியபொழுது அவர்களோடு வந்து குடியேறியவர்கள்.  அவர்கள் அந்தந்த பகுதியின் கலாச்சாரத்தையே கடைபிடிக்கிறார்கள்.

உதாரணத்திற்கு, கொங்கு அருந்ததியரும் கொங்கு பறையரும் இன்றும் கொங்கு வெள்ளாளர்களை போல வெள்ளை சீலை கட்டி, பெருந்தாலி கட்டுபவர்கள்.  இவர்களுக்கும் தெலுங்கு சக்கிலியருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.


சுதந்திரம் என்ற பெயரில், பூர்வகுடிகளின் உரிமைகளை இந்த அரசாங்கம் பறித்து வஞ்சித்துக் கொண்டிருக்கிறது.  


தாழ்த்தப்பட்ட மக்கள் ஏமாற்றுக்காரர்களா, திருடர்களா என்று சிவகாமி IAS கேட்கிறார்?  (8:07 ஆவது நிமிஷம்)

தாழ்த்தப்பட்ட மக்கள் என்று பொத்தாம்பொதுவாக சொல்லி பிரச்சினையை திசை திருப்புகிறார்.  இந்த வார்த்தையை ஏற்றுக் கொள்ள வேண்டாமென்று வன்னியர் சங்கத் தலைவர்களையும், பொங்கலூர் மணிகன்டனையும் கேட்டுக் கொள்கிறேன்.

பொங்கலூர் மணிகண்டனின் வாதம் என்னவென்றால், தங்கள் சமூக பெண்கள் தாழ்த்தப்பட்ட என்று கூறப்படும் சமூக இளைஞர்கள் சிலர் காதல் என்ற பெயரில் ஏமாற்றி வாழ்க்கையை நாசம் செய்கிறார்கள் என்பது.   அதற்கு இந்தம்மா கிறுக்குத்தனமா கேள்விகள் கேட்டு பிரச்சினையை திசை திருப்புவது பட்டவர்த்தனம்.


 தாழ்த்தப்பட்டவர்கள் என்ன வழிப்பறி செய்பவர்களா, ஏமாற்றுக்காரர்களா ?  தாழ்த்தப்பட்டவர்கள் என்ன பண்பாட்டில் குறைந்தவர்களா?   கொங்கு வெள்ளாளர்கள் இவர்களை விட எந்த விதத்தில் சிறந்தவர்கள்?  தாழ்த்தப்பட்டவர்கள் எந்த விதத்தில் குறைந்துவிட்டார்கள்??   சாதியை வைத்து குணம் வருகிறதா?  இதற்கு விஞ்ஞானப்பூர்வமாக ஆதாரம் இருக்கிறதா?  ..   இப்படி, சம்பந்தா சம்பந்தமில்லாத கேள்வியை கேட்டுள்ளார்.   இவரின் கேள்வியின் அர்த்தமற்றத்தனத்தை கொஞ்சம் பார்ப்போம்.


முதலில் இவர் தாழ்த்தப்பட்ட என்று சொல்லும் சாதிகள் யாரும் இப்படி பேசுவதில்லை.  அந்த சாதிகளை வைத்து அரசியல் செய்யும் சில கட்சிகள், அந்த சாதி இளைஞர்களை தூண்டிவிட்டு, பொருளுதவியும் செய்து, மேல்ஜாதி பெண்களை சொத்துக்காக ஏமாற்றி காதல் வயப்படுத்துவது நிரூபிக்கப்பட்ட ஒன்று.  அந்த சாதியில் இருக்கும் சாதாரண மக்கள், இதை ஏற்றுக் கொள்வதில்லை.  முக்கியமாக, பெரியவர்கள், இதை கடுமையாக எதிர்க்கிறார்கள்.

ஆக, இந்தம்மா, தலித் பேரை வைத்துக் கொண்டு அரசியல் செய்யும் ஒரு சில கட்சிகளின் அட்டூழியங்களை, தாழ்த்தப்பட்ட என்ற முகமூடியை பயன்படுத்தி மறைக்கவும், நியாயப்படுத்தவும் பார்க்கிறார்.

கொங்கு நாட்டின் பூர்வ குடிகளான கொங்கு பறையர், கொங்கு பள்ளர், கொங்கு அருந்ததியர் அனைவரும், அந்த பகுதியில் பண்பாட்டையே கடைபிடிக்கிறார்கள்.  அவர்களுக்கும் கணவர் இறந்தால் வெள்ளை சீலை கட்டும் வழக்கம் உண்டு.  அப்படி இருந்தும் அவர்கள் யாரும் இவரை போல அடாவடியாக பேசுவதில்லை.  காரணம் அவர்களுக்கு நாகரிகம் இருக்கிறது.

இந்த மாதிரி படித்தவர்களை விட பல மடங்கு அவர்கள் பண்பாட்டில் உயர்ந்தவர்கள்.

பண்பாட்டின் அடிப்படையில் வேறுபடுத்திக் காட்டுவது அடாவடி என்று சொல்கிறார்..!!!

உண்மையில் இப்படி சொல்வதுதான் அடாவடி..  பண்பாடும் கலாச்சாரமும், இந்தியா முழுதும் வேறுபடுவதால்தான் நமது சமூகத்தை Multi-Cultural, Pluralistic Society என்று சொல்கிறோம்.  அப்படி இருக்கும்பொழுது, கேட்பவன் எல்லாம் கேனயன் என்று நினைத்துவிட்டார்  போல.

யாருக்கும் எந்த பண்பாடும் இருக்க கூடாது..  எல்லாரும் காட்டு மிராண்டியா இருக்கவேண்டும்.  இவர் வக்காலத்து வாங்கும் விடுதலை சிறுத்தைகள், ஆதித் தமிழர் பேரவை போன்றவர்கள்தான் மனித குலத்துக்கு உதாரணம். விடிவெள்ளி..  எல்லாரும் தங்களுடைய பண்பாட்டினை தூக்கி எறிந்துவிட்டு அவர்களை கடைபிடித்து, இவரின் சமத்துவ நீதியில் ஐக்கியமாக வேண்டும் போல..

இந்திய அரசியல் அமைப்பு சட்டம், இந்தியாவின் ஒவ்வொரு கலாச்சார குழுக்களும், தங்களுடைய வாழ்க்கைமுறையை பாதுகாத்துக் கொள்ளும் உரிமை உள்ளது என்று சொல்கிறது.  அப்படி இருக்கும்பொழுது, யாரும் தங்களுடைய பண்பாட்டினை கடைபிடிக்கக் கூடாது என்பது சட்டப்படி குற்றம்.


சாதிரீதியாக வேறுபடுத்திப் பார்ப்பது நியாயமா?  ஐம்புலன்களால் உணரக்கூடிய காரணம் என்ன என்று கேட்கிறார் தொகுப்பாளர்

இந்த கேள்வியே தவறானது.  வேறுபாடுகளை ஐம்புலன்களால் அறிய முடியாது.  ஆறாவது அறிவை கொண்டே எந்த வேறுபாடுகளையும் அறிய முடியும்.  ஐம்புலன்கள் என்பது, ஒரு INPUT Device மட்டுமே.

வேறுபாடுகளுக்கு ஒரு முக்கியமான காரணமே பழக்க வழக்கங்கள் தான்.  ஒரு பிராமணர் மாமிசம் சாப்பிடக் கூடாது என்பது அவர்களின் குல தர்மம்.  மாட்டுக்கறி சாப்பிடும் ஜாதிகளிடம் அவர்கள் எந்த விதத்திலும் வாழ முடியாது.  இந்த ஒரு உதாரணமே போதும், இவர்களின் வாதங்களை உடைக்க.

பேசும் விதம், உண்ணும் உணவு, உளவியல் அமைப்பு, எல்லாம் ஒவ்வொருவருக்கும் தன் குடும்பத்திலிருந்தும், தான் வாழும் சமூகத்திலிருந்தும் பெறப்படுகிறது.   சென்னையில் மீனவர்கள் பேசும் மொழிக்கும், வாழ்க்கை முறைக்கும், அருகில் காஞ்சிபுர வெள்ளாள முதலியார்களுக்கு ஒத்து வராது.

மலையகத்தில் வாழும் பழங்குடியினரின் வழக்கங்களும் சிந்தனை முறையும்   (குறும்பர், குறவர், இருளர் போன்ற குழுக்கள்) இவர்கள் தாழ்த்தப்பட்டதாக சொல்லும் சாதிகளுக்கே பொருந்தாது.

ஆக சாதி ரீதியாக வேறுபாடு என்பது இயற்கையானது.  அந்த வேறுபாடு கூடாது, எலலரும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று சொல்லுவதுதான், இயற்கைக்கு எதிரானது.  சமத்துவம் என்பது UNIVERSAL கிடையாது.   இந்தியாவில் இருக்கும் சாதிகளில் ஒரு சில சாதிகள் இன்னும் சில சாதிகளுக்கு சமமாக இருக்கும்.  ஆனால் எல்லா சாதியும் சமம் என்பது இயற்கைக்கு எதிரானது.  அடிமைச் சமூகங்களில் மட்டுமே சமத்துவம் நிலவும்.  சுதந்திரமான சமூகத்தில் அப்படி இருக்காது.
அதனால்தான் இவர்கள் தாழ்த்தப்பட்ட என்று சொல்லும் சாதிக்குள்ளேயே சமத்துவம் இல்லை.

இந்த தலித் அடாவடி அமைப்பினரை எதிர்க்கும் பொங்கலூர் மணிகண்டன், ராமதாஸ் போன்றவர்கள் தயவு செய்து இந்த மாதிரி அடிப்படை விஷயங்களை புரிந்து கொண்டு, தங்களை சித்தாந்த ரீதியாக தயார் செய்து கொள்ள் வேண்டும்.

--------------------------------------------------------------------------------  தொடரும்.............

அடுத்த பதிவில் மேலும் சில வாதங்களை அலசுவோம்..

1 கருத்து: