ஞாயிறு, 2 டிசம்பர், 2012

தலித் அமைப்புகளின் பிரச்சார பொய்கள் - 1

தலித் என்னும் ஒரு செயற்கையான ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டு, தலித் அமைப்புகள் செய்யும் பிரச்சாரப் பொய்கள் பல வருடங்களாகவே தொடர்ந்து கொண்டிருக்கின்றன.  

இதுநாள் வரை, இந்த பிரச்சாரத்தை பயன்படுத்தி இட ஒதுக்கீடு மட்டுமே பெறும் நிலை இருந்தது.   ஆனால் கடந்த சில வருடங்களாக, இந்த அமைப்பினர், நில உடைமை ஜாதிகளின் பெண்களை திட்டமிட்டு கல்யாணம்  செய்து, அவர்களின் சொத்துக்களை அபகரிக்க ஆரம்பத்திருக்கிறார்கள்.  இந்த பகல் கொள்ளையை தைரியமாக நியாயப்படுத்தியும் வருகிறார்கள். 

இவர்களின் திட்டமிட்ட பிரச்சார பொய்களை எதிர் கொள்ள முடியாமல், பாதிக்கப்பட்ட "ஆதிக்க சாதி" என்று சொல்லப்படும் சாதிகள், , பொதுத் தளத்தில் தங்களது நியாயமான வாதங்களை கூட எடுத்து வைக்க முடிவதில்லை.  

சமீபத்தில் கேப்டன் டி.வி யில "சொல் புதிது" என்ற நிகழ்ச்சியில், தர்மபுரிய பத்தின ஒரு விவாதத்தில் சமத்துவ நீதிக் கட்சி தலைவி சிவகாமி IAS, இந்த மாதிரி கட்டமைக்கப்பட்ட பொய் பிரச்சாரத்தை லாவகமாக பயன்படுத்தியிருக்கிறார்.    அதைப்பற்றி ஒவ்வொன்றாக இங்கே பார்ப்போம்.






அதற்கு முன் ஒரு சில அடிப்படை விஷயங்களை புரிந்து கொள்வோம்.

புதன், 21 நவம்பர், 2012

சமூக புரட்சியா இல்லை சமூக கற்பழிப்பா?

சமீபத்தில் நடந்த தர்மபுரி சம்பவம், ரொம்ப நாள் அமுங்கி கிடந்த ஒரு முக்கியமான பிரச்சினையை மிகவும் பகிரங்கமாக வெளிக் கொணர்ந்திருக்கிறது.  அதுதான் ஜாதி விட்டு ஜாதி காதல் பிரச்சினை.  வன்னியர் சமூகம், தன் சமூகப் பெண்ணை அருந்ததியர் சமூக ஆண் கவர்ந்து சென்றதை, அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதையே இந்த சம்பவம் காட்டுகிறது.

இது வெறும் கலப்பு மணம் அல்ல.  திட்டமிட்டு இளம் பெண்களை திருமாவளவன் கட்சி இளைஞர்கள் கவர்ந்து செல்லும் ஒரு களவு என்கிறார் பா.ம.க தலைவர் ராமதாசும், காடுவெட்டி குருவும்.  இதைப் பற்றி பி.பி.சி வானொலிக்கு அவர்கள் அளித்த பேட்டியில்  விரிவாக கூறியிருக்கிறார்கள்.  பள்ளிக்கூட பெண்ணை காதல் வயப்படுத்தி திருமணம் செய்து, 6 மாதத்தில் திருப்பி அனுப்பினால், அப்பெண்ணின் அண்ணனோ தந்தையோ என்ன செய்வார் என்று கேள்வி எழுப்புகிறார்.  நியாயமான கேள்வி!   கடலூரில் மட்டும் 2000 பெண்களுக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற புள்ளிவிவரத்தையும் தருகிறார்.

இதற்கு முன்பு, கொங்கு மண்டலத்தில், கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் பேரவைத் தலைவர் பொங்கலூர் மணிகண்டன், சாதி மறுப்பு உறுதிமொழி ஏற்பு கூட்டத்தை நடத்தியது, தமிழ்நாட்டில் பலரை திரும்பி பார்க்க வைத்திருந்தது.  இன்று நிலத்தின் மதிப்பு உயர்ந்துள்ளதால், விவசாய சமூகமான கொங்கு வெள்ளாளரின் சொத்தை குறி வைத்தே அந்த சமூகத்தின் இளம்பெண்களை மயக்கி திருமணம் செய்கிறார்கள் என்கிறார்.