செவ்வாய், 21 செப்டம்பர், 2010

காதல்.. யதார்த்தம் .. ஜாதி..

எச்சரிக்கை:  இது ஒரு உண்மை கதை..

சினிமாவோட தாக்கம் இன்னிக்கு எந்த அளவுக்கு சமுதாயத்த சீரழிக்குதுங்கறதுக்கு பல உதாரணங்கள் இருக்கு..  நிஜ வாழ்க்கையிலிருந்து வெகுதூரத்துக்கு இளைஞர்களை தடம்மாறச் செஞ்சு கடைசியில வாழ்க்கையே நரகமாக்கிட்டு இருக்குங்குறது தான் இன்றைய யதார்த்தம்..  ஆனா கண்கெட்ட பிறகுதான் சூரியோதயம்ங்கறது, இன்றைய இருப்போதாறாம் நூற்றண்டிலும் பொருத்தமாதான் இருக்குது..  அப்படிப்பட்ட இரண்டு உண்மை சம்பவங்கள் இங்கே ..


சம்பவம்‍ 1:
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍
 அந்த பெண்ணோட தந்தை ஒரு தொழிலதிபர்..  நூறு கோடிக்கு மேல சொத்து..  ஒரே பொண்ணு..  எஞ்சினியரிங் படிக்க வைக்கிறாரு..  தினமும் கார்லதான் காலேஜ்..  வாழ்க்கையில் சகல வசதிகளும் அந்த பெண்ணோட காலடியில..  ஆனா, காலேஜ்ல கூட படிக்கிற ஒரு பையனோட காதல்.. சாதாரண காதல் இல்ல..  ஜாதி மாறிய காதல்..  அதுலயும், நம்ம தமிழ் சினிமாவுல தவறாம் வர்ற ஒரு பாத்திரம்..  பையன் ஒரு தலித் சமுதாயத்த சேர்ந்தவன்..   காலேஜ்ல நாலு வருஷம் முடியற‌ வரைக்கும் அந்த சினிமா வாழ்க்கை நிஜமானதா தெரிஞ்சுது..  ஆனா, அதுக்கப்புறம்..

அந்த பொண்ணோட அப்பாவுக்கு எப்ப இந்த விஷயம் தெரிய்ம்ன்னு எனக்கு தெரியல..  ஆனா திடீர்னு ஒரு நாள் அந்த பையனோட ஓடிப்பொய் கல்யாணம் பண்ணிக்கிச்சு..  அப்புறமென்ன.. இருக்கவே இருக்கு காவல் துறை..  ( அதான்  படத்துக்கு படம் பாடம நடத்துறாங்களே)..  நேரா பொலீஸ் ஸ்டேஷன்ல பஞ்சாயத்து..   100 கோடிக்கான‌ தொழிலதிபர் அங்க கண்ணீர் மல்க நிக்கிறார்..

ஸ்டாப்..  இதுல என்ன ஆச்சரியம் என்று பல பேர் கேட்பது எனக்கு புரியுது..  எல்லா இடத்துலயும் நடக்குறதுதானே..  ஆனா அவசரப் படாதீங்க..  இனிமேதான் கதையே இருக்குது..

அந்த பாவப்பட்ட தகப்பன், கெஞ்சறாரு..  கதறராரு..  கண்ணீர் விடறாரு..  வாழ்க்கையோட நிதர்சனத்த அந்த பொண்ணுக்கு எடுத்து சொல்றாரு..   தன்னோட வந்துட சொல்லி கெஞ்சுறாரு..

ம்ஹூம்...  எதுக்கும் அந்த பொண்ணு இரங்குல..  நான் அந்த பைய்னோடதான் போவேன்னு ஒரே முடிவா சொல்லிடுச்சு..

 "இதுக்கு மேலா நாங்க ஒன்னும் செய்ய முடியாதுங்க சார்".. ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் சொல்றாரு..

அந்த பொண்ணுக்கு தன் அப்பாவோட ஏதாவது சண்டையா என்ன்மோ தெரியல..  இன்ஸ்பெக்டர் அப்படி சொன்னதுமே, அந்த பையனோட கை தட்டி ஒரு சேஸ் கொடுத்து ரெண்டு பேரும் கொண்டாடுறாங்க..  அந்த பாவப்பட்ட அப்பனுக்கு உயிரையே உரித்து போட்டது போல..  அப்படியே ஆடிப் போய் வீட்டுக்கு வந்துட்டாரு..  இதுக்கு மேல யாருக்காக அவர் இருக்கனும்? இல்ல யாருக்காக இந்த 100 கோடி சாம்ராஜ்ஜியம்..?    இவ்வளவு நாள் தன்னோட சமுதாயத்துல, தன் சொந்த பந்தங்கள் மத்தியில இருக்குற அந்தஸ்து, மரியாதை,  எல்லாம் ஒரே நாள்ல காலி..

மனசொடிஞ்சு அப்படியே உக்காந்துறராரு..

ஆனா விதி மறுபடியும் விளையாடுது..   சரியா ரெண்டு மாசத்துக்குள்ள அந்த பொண்ணு அந்த பையனோட இருக்க முடியாம திரும்பி வந்து காலடியில விழுந்து கதறுது..  இந்த ரெண்டு மாசத்துல என்ன நடந்துதுன்னு எனக்கு தெரியல.. ஆனா நான் கேள்விப்பட்ட வரையிலும், வசதியா வாழ்ந்த அந்த பொண்ணால அந்த பையன் வீட்டுல ரொம்ப நாளைக்கு இருக்க முடியல.. 

அப்புறம், தனக்கு தெரிந்த ஒரு பையன பார்த்து இன்னொரு கல்யாணம் பண்ணி வெச்சதா கேள்விப்பட்டேன்..  ஆனா, அவரால தன மகளை மறுபடியும் ஏத்துக்க முடியல..  "உனக்கு வேணும்னா ஒரு கோடியோ ரெண்டு கோடியோ தர்றேன்..  வாங்கிக்க.. ஆனா இனிமேல ஜென்மத்துக்கும் என் மொகத்துல முழிகாத..  என்னோட சொத்து பூராவும் நான் அனாதை இல்லத்துக்கு தர்ம சத்துரத்துக்கும் எழுதி வைக்க பொறேன்.."

தீர்க்கமா அவர் சொல்லிட்டாரு...


சம்பவம்‍  2:

இது கொஞ்சம் பழைய கதை..  அந்த பொண்ணு நல்ல மாநிறம்..  இதே போல, ஒரு தலித் சமுதாயத்து பையன காதலிச்சு கல்யாணமும் பண்ணியாச்சு..  புருஷன் நல்ல சம்பளத்துல நல்ல உத்தியோகத்துல இருக்கார்..  ஒரு பெண் குழந்தை ..   ஆனா வாழ்க்கையோட நிதர்சனத்துக்கு முன்னாடி நிக்க முடியல..  இந்த பெண் தன்னோட குழந்தைகள, புருஷனோட சொந்த பந்தங்கள் மத்தியில பழக விடறதில்ல..  இந்த பொண்ணும் அவங்க வீட்டுக்கு அதிகமா போறதில்ல..  கடைசியா நான் கேள்விப்பட்ட வரையிலும, தன்னொடா சகோதரர் பையனுக்கு தன் மகளை கல்யாணம் பண்ணி வைக்க விரும்புறாங்க..
--------------------------
‍‍‍‍‍‍
இந்த இரண்டு சம்பவங்களுமே நிஜ உலகத்துக்கும், சினிமாவில் காட்டப்படும் உலகத்துக்கும் இருக்கிற வித்தியாசத்த பிரதிபலிக்குது..    முதல் சம்பவத்துல, பெற்றோரை காதலுக்கு எதிரி மாதிரி கற்பனை செய்து அந்த போலீஸ் ஸ்டேஷன்ல ரெண்டு பேரும் சேஸ் கொடுக்கற அளவுக்கு போனதுக்கு யார் காரணம்?  சினிமாதான்..  இன்னிக்கு வர்ற படங்களில காமெடிங்கற பேர்ல, அப்பா அம்மாவை கிண்டல் செய்வதில் தொடங்கி, தந்தைய காதலுக்கு எதிரியா கொண்டுவந்து , காதலர்கள் அவங்களுக்கு எதிரா போராடறது வரை, ஒரு பெரிய மாயையே உருவாக்கி கொண்டு வருகிறார்கள்..    அதாவது பரவாயில்ல..  காதல் செய்யலைனா, வாழ்றதுலயே ஒரு அர்த்த இல்லைங்கற மாதிரி ஒரு மாயை..   காலேஜ்ஜை மையமா வைத்தே ஏகப்பட்ட திரைப்படங்கல்.. அத்தனை படங்களும் உருப்படியானவையான்னு பார்த்தா அதுவும் இல்ல..
இப்படி, ஒரு தலைமுறையையே பாழாக்குவதை இன்று சமுதாய புரட்சி என்று நியாயப்படுத்தி மேலும் அரங்கேத்துக்கிட்டுருக்காங்க..


ரெண்டாவது சம்பவம் காதலுக்கு பின்னால் வரப்போகும் யதார்த்தத்தை காட்டுகிறது..  காதல் வேண்டுமானால் இரு மனங்களுக்கு மட்டுமான ஒரு உலமா இருக்கலாம்..  ஆனா, கல்யாணத்துக்கு, இருவர் மட்டும் பத்தாதுங்கற யதார்த்தம், பின்னாடிதான் புரியும்..  என்னதான் படித்திருந்தாலும், என்னதான் சமத்துவம் பேசினாலும்,  ஒவ்வொருத்தரோட விருப்பு வெறுப்புகள் அவர்கள் சேர்ந்த சமுதாயத்த, ஜாதிய பொறுத்தே அமையும்..  அதனாலதான்  ஒவ்வொரு ஜாதிக்கும் ஒரு அடையாளம், ஒரு பழக்கவழக்கங்கள் இருக்கு..    அவங்கவங்களுக்கு அது ப‌ழகி போயிடும்..  அதனால தான் ஜாதி விட்டு ஜாதி கல்யாணம் பண்றத தலித் மக்களே (அதாவது நியாய தர்மத்துக்கு கட்டுப்பட்ட பழைய தலைமுறை)  விரும்புறதில்ல.. 

ஆனா இன்றைய சூழ் நிலையில், இந்த யதார்த்தத பேசினாலே பிற்போக்குவாதி மாதிரி ஒரு நிலையை கொண்டுவந்து விட்டார்கள்..  வேறு யாருமில்லை..  ஆங்கிலம் படித்துவிட்ட ஒரே காரணத்திற்காக, சமுதாயம் இப்படித்தான் இருக்க வேண்டும்னு அட்வைஸ் பண்ற உரிமை வந்துடுச்சுன்னு நினைக்கிற முற்போக்குவாதின்னு சொல்லிக்கொள்கிறவர்கள்..

சமுதாய மாற்றம் கொண்டுவர, எல்லா ஜாதியும் கலந்து விட வேண்டும்னு வரி வரியா எழுதுவாங்க..   சமுதாயத்த ஒரு கெமிஸ்ட்ரி லேம் மாதிரி நினைச்சுட்டாங்க போல.. இஷ்டத்துக்கு கலக்குறதுக்கு..   கெமிஸ்ட்ரி லேப்ல கூட, அந்த அந்த வேதிப்பொருட்கள் தனித்தனியா இருந்தாதான் அதனுடைய பயன் இருக்கும்..   அப்புறம், நாம் இஷ்டத்துக்கு அத கலக்க முடியாது..  அப்படி செஞ்சா, எவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்படும்ன்னு நான் சொல்லத்தேவையில்லை....  அதை விட பெரிய பாதிப்பு இன்று சமுதாயத்துல நடந்துக்குட்டு இருக்கு..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக